இரு பாலித்தினருமே தன் எதிர் பாலினத்தை கவர வேண்டும் என்று நினைப்பது அவர்களின் இயற்கை குணமாகும்.
ஆண், பெண் இருவருமே அவர்களை அலங்கரிப்பது, அவர்களின் செயல்கள் என அனைத்தையுமே தங்கள் எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகத்தான் செய்கிறார்கள்.
ஆண்களை கவர்வது என்பது பெண்களுக்கு அவ்வளவு கடினமான காரியமல்ல. ஆனால் பெண்களை கவர்வது என்பது ஆண்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.
ஆனால் இது சில ஆண்களுக்கு மட்டுமே. ஏனெனில் சில ஆண்களுக்கு பெண்களை கவர்வது என்பது இயற்கையாகவே எளிதாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் பிறந்த ராசியாகும்.
ஜோதிட சாஸ்திரத்தில் துல்லியமாக இதனை பற்றி கூறப்பட்டுள்ளது. ஒருவரின் வசீகரத்திற்கு அவர்களின் ராசியும் ஒரு முக்கிய காரணமாகும். சிலர் பொதுவாக அனைவரையும் கவரும் பண்புகளை கொண்டிருப்பார்கள்.
ஆனால் இந்த ராசிகளில் பிறந்தவர்கள் குறிப்பாக பெண்களை எளிதில் கவரக்கூடியவர்கள்.
திருமணத்தின் போது ஜாதக பொருத்தம் பார்ப்பது என்பது இன்று வரை தொடர்கிறது. இதில், பல அறிவியல் உண்மைகள் ஒளிந்து இருக்கின்றன.
அதிலும், உங்கள் ஜனன நட்சத்திரத்திற்கும் உங்களுக்கு பார்த்துள்ள வாழ்கைதுணையின் ஜனன நட்சதிற்கும் வசியபொருத்தம் என்ற ஒரு பொருத்தம் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பிரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறலாம்.
காரணம், உங்கள் துணை மீது காதல், கணவன், மனைவி, தாம்பத்யம், குழந்தை என்பதையெல்லாம் தாண்டி எதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.
பணி நிமித்தமாகவோ அல்லது சண்டையினாலோ இருவரும் பிரிந்தால் அந்த பிரிவு சில மணி நேரங்களுக்கு பிறகு நிலைக்காது. யாரவது ஒருவர் இறங்கி வந்துவிடுவார்கள்.
குடும்பம் நிலைக்கும் செழிக்கும். வசியப்பொருத்தம் இல்லையென்றால் பிரிந்து விடுவார்களா..? என்றால், இல்லை.
கணவனோ, மனைவியோ சண்டையிட்டு கொண்டால் ஒன்று நான் தான் தவறு செய்தேன் என்னை மன்னித்துவிடு என்று இறங்கி வந்து விட வேண்டும். சில சமயம் துணை மீது தவறு இருக்கலாம், ஆனால் அதற்கு நீங்கள் ரியாக்ட் செய்தது அதை விட தவறாக இருக்கும்.
அது போன்ற சமயத்திலும் நாம் தான் இறங்கி வர வேண்டும். உதாரணதிற்கு, நீங்கள் கணவனாக இருந்தால், உங்கள் மனைவி உங்களுக்கு பிடிக்காத உணவை சமைதிருக்கலாம்.. அல்லது பிடித்த உணவை மோசமாக சமைத்திருக்கலாம். அது தவறு தான்.
ஆனால், அதற்காக, நீங்கள் அவரை வண்டி வண்டியாக திட்டிவிட்டால் அது மிகப்பெரிய தவறாக போய்விடும். அப்போது, நாம் தான் இறங்கி வந்து சமாதானப்படுத்த வேண்டும். இது தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம். அதன் பிறகு எல்லாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அவர்கள் பெண்களை கவர அதிக முயற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்களின் இயற்கையான குணமே அதனை செய்துவிடும்.
பெண்களை எளிதில் கவரக்கூடியவர்களில் மிதுன ராசி ஆண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இயற்கையிலேயே மென்மையான குணமும், காதல் உணர்வும் கொண்டவர்கள். அதனாலேயே பெண்கள் எளிதில் இவர்களிடம் பழக தொடங்கிவிடுவார்கள்.
சிறப்புகள்
இவர்கள் பெண்களிடம் பேசுவதில் வல்லவர்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். பெண்களுக்கு ஆர்வமிக்க இளைஞர்களை அதிகம் பிடிக்கும். இவர்களால் பெண்களின் மனதை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
எனவே மிதுன ராசி ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அதேசமயம் அவர்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மனதளவில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள், அதேசமயம் உறவுகளை அதிகம் மதிப்பவர்களாகவும் இருப்பார்கள். காதல் உணர்வு அவர்களுக்கு கூடவே பிறந்தது.
இவர்களுடன் பழகுவதற்கு பெண்கள் ஒருபோதும் கூச்சப்படமாட்டார்கள். இவர்கள் மிகவும் செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களின் மனதில் உள்ளதை வெகுசிலரால் மட்டுமே அறிய இயலும்.
சிறப்புகள்
பணிவும், மென்மையான குணமும் கொண்ட இவர்கள் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த குணங்கள் பெண்களால் மிகவும் பாராட்டப்படும் இதுவே அவர்களை ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கும்.
பெண்களை முதல் சந்திப்பிலேயே ஈர்க்கும் குணம் இவர்களுக்கு உள்ளது. தாரளமனப்பான்மையும், உணர்ச்சிகள் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் நல்ல பழக்கவழக்கங்கள் பெண்களின் இதயத்தை எளிதில் வெல்லக்கூடியதாக இருக்கும்.
துலாம்
இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாகவும், விசித்திரமானவர்களாகவும் ஜோதிட சாஸ்திரத்தால் பார்க்கப்படுகிறார்கள். அழகான பெண்கள் இவர்களை நோக்கி விரைவாகவும், எளிதாகவும் ஈர்ப்பு கொள்வார்கள்.
இவர்களின் ஸ்டைல் எப்பொழுதும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானதாக இருக்கும். ஒரே நேரத்தில் இவர்களால் பல குணங்களுடனும், செயல்களுடனும் இருக்க முடியும். இவர்களை துணையாக ஏற்பது பெண்களுக்கு புதிய அனுபவத்தையும், ஆழமான, அன்பான காதலையும் வழங்கும்.
சிறப்புகள்
காதல் மற்றும் கடமையை இவர்கள் திறமையாக, எளிதாக சமநிலையில் வைத்திருப்பார்கள். இவர்கள் மிகவும் கூச்சசுபாவம் உடையவர்கள், கோபாடக்கூடியவர்கள்.
ஆனால் ஒரு பெண் இவர்களுடன் கொஞ்சநேரம் பழகிவிட்டால் போதும் இவர்களை வாழ்க்கையில் இழந்துவிடக்கூடாது என்று நிச்சயம் நினைப்பார்கள்.
மகரம்
மகர ராசி ஆண்கள் தோற்றத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் எளிதில் பெண்களை கவர இது ஒரு முக்கிய காரணமாகும். தோற்றத்தால் மற்றவர்களை கவரும் இவர்கள் பெண்களின் மனதை மாற்றுவதில் நிபுணர்கள்.
இவர்களின் வித்தியாசமான பேசும் மற்றும் பழகும் விதம் பெண்களை எளிதில் இவர்களை நோக்கி ஈர்க்கும்.
சிறப்புகள்
இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். மற்றவர்களை காட்டிலும் வசீகரத்திலும், ஆளுமையிலும் எப்பொழுதும் தனித்தன்மையுடன் இருப்பார்கள். இவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
இதுபோன்ற ஆண்களுடன் பெண்கள் எப்பொழுதும் நண்பர்களாக இருக்க அதிகம் விரும்புவர்.