இந்த 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் இரண்டு தடவை கதவை தட்டும்: உங்க ராசி இருக்கா?

முதல் வாய்ப்பை தவறவிட்ட எல்லோரும் தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காத என்று எண்ணியதுண்ட.அப்படி ஜோதிடத்தில் ஒரு சில ராசியினருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் இரண்டு முறை கதவை தட்டும்.கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் இரு தடவை கதவை தட்டும் என்று சொல்லப்படுகின்றது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பல விஷயங்களில் சகலகலா வல்லவர்கள் ஆனால் சில விஷயங்களில் சறுக்கலை சந்திப்பார்கள்.அது அவர்களின் தவறல்ல ராசியின் நட்சத்திர பலாபலன்களை பொறுத்ததே. கிரக நிலைகள் எப்படியோ ஆனால் கும்ப ராசிக்காரர்கள் வேற்று கிரகவாசிகள் போல யதார்த்த சூழலை விட்டு விலகியே யோசித்து செயல்பட நினைப்பார்கள்.ஆனால் வாழ்வில் தவறவிட்ட வாய்ப்பை மீண்டும் பெற முற்றிலும் தகுதியானவர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சில குறைகளை கொண்டிருந்தாலும் பலவீனமானவர்கள் அல்ல. எவரையும் கடுமையாக விமர்சிக்கும் குணமுடையவர்கள் என்றாலும் கொடூரமான குணம் கொண்டவர்கள் இல்லை.உதட்டளவில் சுடுசொற்களை உதிர்ப்பவர்களாக தோன்றினாலும் உள்ளத்தளவில் எந்த தீய உள்நோக்கமும் இல்லாதவர்கள் தான். இவைகள் தான் கன்னி ராசிக்காரர்களின் இயல்பான குணநலன்கள்.ஆனால் தவறு செய்தால் அதை தைரியமாக ஒப்புக்கொள்ளும் இவர்களும் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை வெல்ல தகுதி உடையவர்களே!

மகரம்
மகர ராசிக்காரர்கள் பொறுமையின்றி யாரையாவது மனதளவில் காயப்படுத்தினாலும் அதற்கு அடிப்படை காரண காரியங்கள் கண்டிப்பாக இருக்கும்.வாழ்வின் இலக்கை நோக்கி பொறுப்பாக பயணிக்க கூடியவர்கள். ஆனாலும் சில விஷயங்களின் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் பிடிவாதம் மிக்கவர்கள். இவர்களை எளிதாக கணித்துவிட முடியாது.ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் தான். அதனால் தான் மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு இனிதே அமையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தவறே செய்தாலும் தங்களது முக வசீகரத்தால் தண்டனையில் இருந்து தப்பிவிடும் பலே கில்லாடிகள் தான். ஆனால் தானும் மகிழ்வோடு இருந்து தங்களை சுற்றி இருப்போரை எப்போதும் மகிழ்வோடு வைத்துக் கொள்ள விரும்புபவர்கள்.தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்கிற கொள்கை இவர்களுக்கே பொருந்தும்.அதனால் தாராள மனசுடன் இவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கலாம்.அதற்கு துலாம் ராசிக்காரர்கள் தகுதியானவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் ஆக்ரோஷம், போட்டி மனப்பான்மையை கண்டு பலரும் அவர்களை விட்டு விலகி இருப்பதையே விரும்புவர்.அடம் பிடிப்பதோடு இவர்களை விளையாட்டில் கூட யாரும் வெல்வதை விரும்பி ஏற்றுக் கொள்ள தயங்குபவர்கள். தோற்கும் சூழ்நிலை தோன்றும் போதே ஆட்டத்தை கலைத்து விடும் சமார்த்தியசாலிகள்.பொறுமையற்றவர்களாக தோன்றினாலும் இவர்கள் நல்ல நட்புக்கும் பொருந்துவார்கள் தீரா பகைக்கும் தயாராகவே இருப்பார்கள்.அவசர கதியில் செயல்படும் போது தவறுகள் இழைத்தாலும் மேஷ ராசிக்காரர்களை இரண்டாவது வாய்ப்பை பெற தகுதி அற்றவர்கள் என்று முற்றிலுமாக நிராகரித்து விடவும் முடியாது.