இன்று உலகிற்கு கிடைக்கும் நற்செய்தி… ஏப்ரல் 8 முதல் 12 வரை இவ்வளவு ஒரு ஆ பத்தா?… பஞ்சாங்கத்தின் பகீர் தகவல்

கொரோனா வைரஸ் தாக்கி பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகமே பதறிப்போய் கிடக்கும் இந்த சூழ்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது பஞ்சாங்கத்தின் கணிப்பு. ஏப்ரல் 4ம் திகதி உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைக்கும் என்று விகாரி வருடத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு பிறந்த போது இந்தியாவிற்கு நன்றாகத்தான் இருந்தது. யார் கண் பட்டதோ மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட மரண பயம் ஏப்ரல் தொடங்கியும் முடிந்த பாடில்லை. யாரும் யாரையும் நேரில் பார்த்து பேச முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது. அக்கம் பக்கத்தினருடன் கூட பேச முடியவில்லை. ஆறுதலாக சில வார்த்தைகள் கூற முடியவில்லை. தொட்டால் குற்றம், சேர்ந்து நின்றால் நோய் தொற்றிக்கொள்ளும் என்று மாறி மாறி சொல்வதால் அவரவர்கள் வீடுகளில் மக்கள் முடங்கி போயிருக்கிறார்கள். என்றைக்கு இந்த பிரச்சினை தீரும். சகஜமாக மக்கள் என்றைக்கு நடமாடப்போகிறார்கள் என்று அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சாங்கத்தின் கணிப்பு
விகாரி வருடம் முடியப்போகிறது. சார்வரி வருடம் பிறக்கப் போகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே இந்த பஞ்சாங்கம் எழுதப்பட்டு வெளியிடப்பட்டு விடும். நவகிரகங்களின் சஞ்சாரம், கோள்களின் சேர்க்கை, பார்வை, நாள் நட்சத்திரங்களின் அடிப்படையில் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் புதிய வைரஸ் தாக்கும் உலகத்தை ஆட்டி வைக்கும் என்று கணித்துள்ளது. சொன்னது போலவே டிசம்பரில் சீனாவில் உருவான கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த கோவிட் 19 தனது ஆக்டோபஸ் கரங்களினால் உலகத்தை வளைத்துள்ளது.

உயிரிழப்பு அதிகம்
கொரோனா வைரஸ் தாக்கியதால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை ஏற்படுத்தியுள்ளது அரசு. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விலகியிரு, விழித்திரு, வீட்டில் இரு என்பதே இப்போதைய தாரக மந்திரமாகி விட்டது.

நல்ல செய்தி கிடைக்கும்
கொரோனா வைரஸ் நோயில் இருந்து மக்களை காக்க மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் அவர்களை எதுவும் செய்யாது தப்பிப்பிழைக்கலாம். வேறு நோய்கள் இருந்தால் கொரோனாவின் கோர பிடியில் இருந்து தப்புவது கடினம்தான். இந்த சூழ்நிலையில்தான் ஏப்ரல் 4ஆம் தேதி உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.

என்னென்ன நடக்கும்?
இனி வரக்கூடிய நாட்கள் எல்லாமே சவாலான நாட்கள்தான். ஏப்ரல் 14 வரை லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ல் நற்செய்தி கிடைக்கும் என்று கணித்துள்ள பஞ்சாங்கத்தில்தான் ஏப்ரல் 5ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு அதிசயம் நிகழும் என்று கணித்துள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நாள் கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தால் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாங்கம் கணிப்பு என்னென்ன?
ஏப்ரல் 8 முதல் 12 வரை பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளவைகள் பீதியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. ராமநாதபுரத்தில் மதக்கல வரம் உருவாகும் என்றும் முக்கிய நகரத்திற்கு ஆ பத்து என்றும் கணித்துள்ளது. அதே போல குற்றால அருவியில் அதிசய நிகழ்வு இருக்கும். அயல்நாடுகளில் பூகம்பம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது. வட மாநிலங்களில் குறிப்பாக உத்திரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் கல வரம் உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நல்லது நடக்க வேண்டும்
மழை, வெள்ளம், புயல் பற்றியும் வைரஸ் தாக்குதல், பற்றியும் பஞ்சாங்கம் கணித்தது பலித்தது. இப்போது உலகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது பலிக்க வேண்டும் என்பதே மக்களின் பிராத்தனையாகும். ஆகவே இன்று பஞ்சாங்கத்தில் கூறியது போன்று நல்லது என்ன நடக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.