இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்.இந்த குருபெயர்ச்சினால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருபகவான் பல நற்பலன்களைத் தரவிருக்கிறார்.மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார். இந்த குரு பெயர்ச்சி ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை தருகிறது.இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும். மேஷம் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள்.
மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாகும். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள் நீங்கள். வீர தீரம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார்.அஷ்டமத்தில் குரு அவ்வளவாக நல்லதில்லை. ஆனாலும் குரு பகவான் பார்வை ராசிக்கு 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் பல நன்மைகள் நடக்கும். தனவரவு இருக்கும், சுக சந்தோஷங்கள் அதிகரிக்கும். சுப விரையங்கள் அதிகம் ஏற்படும்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பேச நேரம் ஒதுக்குங்கள் சண்டைகளை தவிர்க்கலாம்.சாப்பாட்டு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிறு கோளாறுகளையும், நோய்களையும் தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்.ரிஷபம் சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பிர்கள்.
நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் குருபகவான் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம்.கல்யாண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும் மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும்.
மிதுனம் புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகவும்,சகிப்பு தன்மையும்,பொறுமையும் உடையவர்களாகவும் எல்லா காரியங்களையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியான குரு ராசிக்கு 6வது வீட்டில் அமர இருக்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானம் இல்லை.
சிம்ம ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் அக்டோபர் மாதம் முதல் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போகிறார். குருபகவான் ராசிக்கு 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடத்தையும் பார்வையிடுகிறார்.வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். தென்திட்டையில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும்.