இன்று தம்பி இசை வெளியீட்டுவிழா – சிரிக்க வேண்டிய சமயத்தில் நடந்த சோக நிகழ்வு – கதறி அழுத கார்த்தி

தமிழ் சினிமாவில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் இளம் நாயகன் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியான இவர் அறிமுகமான முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

சில படங்கள் சொதப்பினாலும் தற்போத தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து கலக்கி வருகிறார். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக தம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்த கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா என்பவர்

நேற்று இரவு உளுந்தூர் பேட்டை சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்த செய்தியைக்கேட்டு அதிகாலையிலேயே நேரில் சென்று கதறி அழுது அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்தார். இசைவெளியீட்டு விழாவிலும் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன