இப்படியும் சில பெண்கள் உண்டா ..?? அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு

இன்றைய இளம் ஆண், பெண்கள்… அழகை விட தனது துணை ஃபேஷனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இப்போது காதலிக்கும் பெண்ணைவிட வேறொரு பெண் ஃபேஷனாக தெரிந்தால் மனம் அலைபாய தொடங்கிவிடுகிறது. முகம் பல்லி போல இருந்தால் கூட பரவாயில்லையாம், ஃபேஷனில் கில்லியாக இருக்க வேண்டுமாம்.இப்படி தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் காதல் ஜோடிகள் மத்தியில் இளம் பெண் ஒருவர் தன் காதலை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகுழ்ச்சிகரமான செயல் ஒன்றை செய்துள்ளார்

ஐந்து மாதங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்த காதலன் விஜய்யை அரசு மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றார் ஷில்பா.திருமணமாகி 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போதும் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் விஜய். கால் இழந்த விஜய்யால் உன்னை எவ்வாறு காலம் முழுவதும் வைத்து காப்பாற்ற முடியும் என ஷில்பாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் தனது கல்லூரி காதலன் தான் முக்கியம் என கருதி விஜய்யை திருமணம் செய்துகொண்டார் ஷில்பா.

ஷில்பாவின் உண்மையான காதல், கோபத்தோடு இருந்த அவருடைய பெற்றோர்களின் மனதையும் இளக வைத்திருக்கிறது. தற்போது, இரண்டு குடும்பமும் சந்தோஷமாக உறவாடுகிறார்கள்.

தற்போது, செயற்கைக் கால்கள் பொருத்திக்கொண்டு நடக்கப் பழகுகிறேன். அதன் உரசலால், கொப்புளங்கள், ரத்தம் வடிவது என வலி மிகுந்திருந்தாலும், `சீக்கிரம் சரியாகிடுவேன்.அதன்பின்னர், வேலைக்கு போய், என் அம்மாவையும் ஷில்பாவையும் உள்ளங்கையில் வெச்சுத் தாங்கணும் என்று கூறுகிறார் விஜய்.