இயக்குநர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!!

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

மணிரத்னம் தற்போது ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.தமிழ் திரையுலகில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம்.

‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ உள்பட பல வெற்றி படங்களுக்கு சொந்தக்காரர். ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளளார். இவர் கடைசியாக கார்த்தி நடித்த “காற்று வெளியிடை” திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ரோஜா படம் மூலம் இந்திய திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம். மணிரத்னத்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும்.

திரைக்கதையை மக்களின் மனங்களுக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்வதில் வல்லவர்.இப்போது 62 வயதாகும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்