இயக்குனர் சொன்னதால் பிகினியில் நடித்த நடிகைக்கு ஏற்பட்ட கொடுமை- கதறி அழும் பிரபலம்

சினிமாவில் நடிகைகள் பணிபுரிவது சாதாரணமான விஷயம் இல்லை. இப்போது தான் நாயகிகள் பலர் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பாலிவுட்டின் பிரபல நாயகி தனுஸ்ரீ, நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த நேரத்தில் நடிகை சப்னா பாபி தனக்கு நடந்து ஒரு கொடுமை பற்றி பேசியுள்ளார்.ஒரு பாடலுக்கு நான் டான்ஸ் ஆடியபோது நடந்த சம்பவம்

எனக்கு இன்னும் அப்படியே நினைவில் உள்ளது.பாடல் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது நான் என் உடை அலங்கார நிபுணரிடம் சென்று அன்டர்வயர் உள்ள பிகினியில் 7 மணிநேரத்திற்கும் மேலாக ஆடினால் நெஞ்சு வலிக்கும் என்றேன். அவரும் பெண் புரிந்துகொள்வார் என்று கூறினேன்,

ஆனால் அவரோ அதை இயக்குனரிடம் சொல்லி கிண்டல் செய்து சிரித்தனர். முடியாது என்று கூறினால் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் அப்படியே நடித்தேன்.

அன்று நெஞ்சு வலி தாங்க முடியாமல் தூக்கத்தில் பாதியில் எழுந்து இரவு முழுவதும் அழுதேன் அதை எப்போதும் மறக்கவே மாட்டேன் என பேசியுள்ளார்.