இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பிக் பாஸ் ரேஷ்மா.? மாப்பிள்ளை இவர்தானா ??

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரேஷ்மா.தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹவின் சகோதரியான இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தது. பிக் பாஸ் போட்டியில் இவர் கலந்துகொண்டபோது தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட சோகங்களையும் அனுபவங்களையும் பற்றி பகிர்ந்து கொண்டார். ரேஷ்மா அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு இவரும் அவரது கணவரும் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தனர்.

அவ்வப்போது சிறுசிறு சண்டைகளை சந்தித்து வந்த இந்த தம்பதியினர் வாழ்வில் ஒரு நாள் மிகப்பெரிய பிரச்சனை நடந்துள்ளது . அப்போது நடிகை ரேஷ்மா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் . இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ரேஷ்மாவின் கணவர் அவரை கீழே தள்ளி இருக்கிறார். அதிர்ச்சியில் கீழே விழுந்த ரேஷ்மா மயக்கம் அடைந்துள்ளார். மேலும் அதிர்ச்சியில் ரேஷ்மாவின் பனி க்குடம் உடைந்து உள்ளது . இதனை அறிந்த நடிகை ரேஷ்மா யாரும் உதவிக்கு இல்லாத காரணத்தால் தானே தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்.

இவ்வாறு பல பிரச்சனைகளை சந்தித்த ரேஷ்மா தற்போது தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.மேலும் அதில் உங்களை சிரிக்கவைத்து உங்களிடம் அன்பு காட்டும் நபருடன் உங்கள் வாழ்க்கையை செலவழியுங்கள் என கூறியுள்ளார்.தற்போது அவருடன் இருப்பது அவரது காதலரா ? இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா ?? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Life is too short. Spend it with people who make you laugh & feel loved ??? @nishanthravichandran

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on