பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அமோக ஆதரவு பெற்ற சீரியலான சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகி ரக்ஷிதாவுக்கு தோழியாக வந்து அனைவரையும் கவர்ந்தவர் மைனா நந்தினி.

இவரது தனிப்பட்ட வாழ்க்கை ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது. அதில் இருந்து இப்போதுதான் மெல்ல மீண்டுவந்துள்ளார். ஜிம் மாஸ்டர் கார்த்திகேயனை சிலவருடங்களுக்கு முன்பு மைனா நந்தினி திருமணம் செய்தார். ஆனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2017ல் தற்கொலை செய்து உயிரை விட்டார் கார்த்திகேயன்.

இதனால் மன உலைச்சல் ஒருபுறம், சிக்கலில் மறுபுறம் என தவித்துவந்த நந்தினி, யோகேஷ் என்பவர் மீது காதல் வயப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தினி_யோகேஸ்க்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இப்போது திருமணம் முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
