இரண்டு வருட காதல்.. திருநங்கையை திருமணம் செய்த இளைஞன்! திருமணத்தன்று வந்த பிரச்சனை

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்த அருண்குமார் (22).என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் அதே பகுதியில் உள்ள திருநங்கையான ஸ்ரீஜாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.ஆனால் இதற்கு அருண்குமார் வீட்டில் சம்பந்தம் மறுக்கப்பட்டது. இருப்பினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.இந்நிலையில் நேற்றுதூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.ஆனால் கோவில் நிர்வாகிகள் சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் இவர்களின் திருமணத்தை நடத்த முடியாது என கூறிவிட்டனர். இதனால் அவர்களுடன் வந்த நண்பர்கள் கோவில் ஊழியர்களுடன் சண்டையிட்டனர்.பின்னர் திருமண நேரம் முடியவிருந்ததால் பதிவு சான்றிதழ் பிரச்சனையை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து, ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார்.