இறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்..நீயெல்லாம் மனுஷனா டா இப்படியும் சில பிறவிகள் உண்ட

கர்நாடகா மாநிலத்தின் ஹாவேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹாவேரி பகுதியில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள தரை பாலத்தின் அருகாமையில் இருந்து கடந்த வியாழனன்று பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.இதனையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.குறித்த பெண்ணுக்கு 17 வயது இருக்கலாம் எனவும், அவரை கொலை செய்த பின்னர் சடலத்துடன் பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் 28 வயது உறவினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.கடந்த 6 ஆம் திகதி ஷாரதா என்ற அந்த பல்கலைக்கழக மாணவியை அவரது உறவினர் மஞ்சனகவுடா தமது காரில் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார்.ஆனால் ஷாரதா அன்றைய தினம் கல்லூரியில் இருந்து வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பரிதவித்த அவரது தந்தை ஹாவேரி பொலிசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையின்போதே ஷாரதாவின் பாதி எரிந்த உடலை பொலிசார் கைப்பற்றினர். இதனிடையே கைதான உறவினரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று ஷாரதாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் வழியில் தமது சகோதரியின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர்.வீட்டுக்குள் சென்றதும் ஷாரதாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் மஞ்சனகவுடா. இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் சுயநினைவை இழந்து விழுந்த ஷாரதாவை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.பின்னர் இறந்ததை உறுதி செய்த அவர் ஷாரதாவின் உடலை பாலத்தின் அடியில் வைத்து நெருப்பு மூட்டி கொளுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிசார், கற்பழிப்பு, கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மஞ்சனகவுடா மீது வழக்கு பதிந்துள்ளனர்.