14 வயதிலிருந்து மக்கள் பணியில் ஈடுபட்டு., சீர்திருத்த கருத்துக்களை பாமரமக்களுக்கு சென்றடைய செய்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிஞர் அண்ணா மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும் கொண்டவர்.எந்தளவிருக்கென்றால் அவர் இறந்த பின்பும் தனது உடலை போற்றி வணங்கிய அண்ணா அவர்களின் சமாதி அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே அவரது இருந்து ஆசை.அண்ணா மீது கலைஞர் கொண்ட பாசத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்
ஒரு காலகட்டத்தில் தி.மு.க. தேர்தல் நெருங்கி விட்டது. அறிஞர் அண்ணா கையில் பணம் இல்லாமல் தவித்தார்.ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ரூ.11இலட்சத்தை வசூலித்துத் தந்தார் கருணாநிதி.இதனை பாராட்டி, அண்ணா, கருணாநிதிக்கு ஒரு மோதிரத்தை அணிவித்தார்.இந்த மோதிரத்தை கருணாநிதி பெரிதும் மதித்தார். தன் வாழ்நாளில் அந்த மோதிரத்தை மட்டும் அவர் கழட்டியதே இல்லையாம்.
இதுகுறித்து பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு தயாளு அம்மாள் கடந்த 2000-ஆம் ஆண்டு ஒரு பேட்டி அளித்தபோது கூறுகையில், “அறிஞர் அண்ணா போட்ட மோதிரம் தான் இப்போது வரை அவரது விரலில் இருக்கு, இது தவிர வேறு யாரோ ஒரு சமயம் கொடுத்த பரிசான ஒரேயொரு பவள மோதிரம் மட்டும் போட்டிருக்கிறார்.அவருக்கு நிறைய பேர் மோதித்தை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எதையுமே போட்டதில்லையாம்.
ஆனால் கருணாநிதியின் உயிர்பிரிந்தும் கூட அண்ணா அவருக்கு பரிசளித்த மோதிரத்தை அவர் கழட்ட வில்லை. அந்த அன்பு பரிசுடன் அவருக்கு அருகில் இன்று சென்றடைந்துள்ளார்.