இளமை வேகத்தில் எனது காம இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக நான் பெற்ற குழந்தைகளை என கைகளால் கொடூரமாக கொலை செய்து விட்டேன் என தாய் அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் உள்ளனர்.அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெருக்கம் ஏற்பட்டது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர்.
இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய் அபிராமி கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்,என் கணவர் விஜய் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஏஜென்ட்டாக இருக்கிறார். எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு பிரியாணி என்றால் உயிர். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன்.
சுந்தரம் தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார். எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. அது காமத்தில் முடிந்தது.
மேலும், என் கணவர் இரவு பணி என்று அடிக்கடி சென்றுவிடுவதால், என் இளமை என்னை தூங்க விடவில்லை. மேலும் நான் இரவில் கணவர் விஜயை நெருங்கினால், அவர் என்னை கண்டுகொள்ளவில்லை.இதனால், என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்த சுந்தரத்துக்கு என்னை கொடுத்தேன். அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம்.
என் குழந்தைகள் மற்றும் கணவரை கொலை செய்தால் தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என சுந்தரம் என்னிடம் தெரிவித்தார்.எனவே, கடந்த 30ம் தேதி இரவு விஜய் பிறந்த நாள் பரிசாக இவர்களை கொல்ல முடிவு செய்தேன் அதன்படி பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன்.
மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள்.அடுத்தநாள் (31 ஆம் திகதி) எனது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன் எனது மகனை மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.
பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன்.ஆனால், அன்று இரவு அவர் வீட்டுக்கு தாமதமானது. இதனால், கள்ளக்காதலன் சுந்தரம் என்னை வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு இரவ முழுவதும் ஒன்றாக இருந்தோம்.
காலையில் தாலியை அடமானம் வைத்து கன்னியாகுமரிக்கு என்னை அனுப்பிவைத்தார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.வீட்டுக்கு வந்த எனது கணவர் குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து பொலிசில் புகார் அளித்துள்ளார். சுந்தரம் அபிராமி வீட்டுக்கு வருவது ஏற்கனவே தெரிந்த காரணத்தால் முதலில் சுந்தரத்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவரை வைத்து, அபிராமியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.