இளம்பெண்ணை கொலை செய்து ஆசை தீர்த்துக்கொண்ட வாலிபர்: காட்டுக்குள் நடந்த பயங்கரம்

பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஏமாற்றி பைக்கில் அழைத்துச் சென்ற வாலிபர், அவரை கொலை செய்து சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த சபவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான ரேகா என்ற இளம்பெண் தனது பணி முடிந்து பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, அவருக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். ரேகாவை பார்த்த அவர் பைக்கை நிறுத்திவிட்டு விசாரித்தார். அப்போது, ரேகா அவரிடம் பேருந்து வரவில்லை என்று கூறினார். அதை கேட்ட வாலிபர், ‘உனக்கு தொந்தரவு இல்லை என்றால், பைக்கில் நானே டிராப் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

தனக்கு தெரிந்தவர் என்பதால் ரேகாவும் அவருடன் சென்றார். சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கை நிப்பாட்டியுள்ளார். பின்னர் பெட்ரோல் தீர்ந்துவிட்டது, இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் பேருந்து கிடைத்துவிடும் என்று அழைத்து சென்றுள்ளார். வாலிபர் சாலை வழியாக செல்லாமல் குறுக்கு வழி என கூறி காட்டுப் வழியாக அழைத்துச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த காட்டு பகுதியை பார்த்ததும் ரேகாவுக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது, வாலிபர் தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கினார். ரேகாவை கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றார். ரேகா அவரை எதிர்த்து போராடினார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், ரேகா அணிந்திருந்த துப்பட்டாவால் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர், ரேகாவின் ஆடைகளை கலைந்து சடலத்தை வாலிபர் பலாத்காரம் செய்தார். ஆசை தீர்ந்ததும், சடலத்தை போட்டு விட்டு பைக்கில் தப்பி விட்டார். இந்நிலையில், ரேகா கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த சிலர், துர்நாற்றம் வீசிய இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அங்கு நிர்வாண நிலையில் அழுகிய இளம்பெண் சடலம் கிடந்தது. போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் ரேகா என்பது உறுதியானது. பிரேத பரிசோதனையில், ரேகா கொலை செய்யப்பட்ட பிறகு பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொலிசார் ரங்கசாமி என்ற குறித்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்