இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு இளைஞர் செய்த செயல்! – வெளியான அதிர்ச்சி வீடியோ

போலீஸ் உயர் அதிகாரியின் மகன் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அவரை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் போதை மருந்து தடுப்பு பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருபவர் அசோக் சிங் தோமர். இவரின் மகன் ரோகித் தோமர். இவர் சமீபத்தில் இளம் பெண் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த வீடியோ காட்சி டெல்லி உத்தம்நகரில் கடந்த 3-ஆம் திகதி எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

உத்தம்நகரில் உள்ள பிபிஓ அலுவலகத்துக்கு அந்த இளம் பெண்ணை வரக்கூறிய அந்த இளைஞர் குறித்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து புகார் கொடுப்பேன் என்று கூறியதால் பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண் துணிச்சலாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், இளம்பெண்ணை தரையில் கிடத்தி தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து அந்த இளைஞர் தாக்குகிறார்.தன்னுடைய முழங்காலால் அந்த இளம்பெண் முதுகில் உதைத்து அந்த பெண்ணை சித்ரவதை செய்கிறார். வலிதாங்க முடியாமல் அந்த பெண் அலறுகிறார்.

ரோகித் நிறுத்து, நிறுத்து என்று வீடியோவில் யாரே சிலர் சொல்வது கேட்டபோதிலும், யாரும் அந்த சம்பவத்தை தடுக்கவில்லை. மேலும் இந்த வீடியோ வைரலானதால், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொலிஸ் ரோஹித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.