இஸ்லாமியருக்கு எதிராக இலங்கையில் சிங்களருடன் கை கோர்த்த இந்துத்துவா முகமூடிகள் !! விவரம் மற்றும் வீடியோ உள்ளே !!

 

 

சச்சிதானந்தம் இலங்கையில் பேட்டி-வீடியோ யாழ்ப்பாணம்; இலங்கையானது இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் சொந்தமான பூமி; இந்த மதங்களின் மரபுகளை ஏற்க முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என இஸ்லாமியர்களுக்கு இந்துத்துவா அமைப்பான சிவசேனை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னர் தமிழர்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கலாம் என்கிற முயற்சியில் இந்தியாவில் உள்ள இந்துத்துவா அமைப்புகள் முனைப்பு காட்டின. இதற்காக கல்வியாளர், ஆய்வாளர் என்கிற அடைமொழியுடன் தமிழகத்தில் வலம் வந்த மறவன்புலவு சச்சினாந்தன் களமிறக்கப்பட்டார்.

 

மும்பையில் சிவசேனை தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நீண்டகாலமாக சந்தித்து வந்தார். தற்போது இலங்கையில் சிவசேனை என்ற பெயரில் இந்து சாமியார் சீருடையில் உருத்திராட்ச உடையில் வலம் வருகிறார் சச்சிதானந்தம். தமிழகத்தில் இருந்தபோது முழு வெள்ளை உடையில்தான் வலம் வருவார்.

தமிழர் வாழும் பகுதிகளில் இந்துக்கள் என்ற முழக்கத்துடன் சமய நிகழ்ச்சிகள், வகுப்புகளை எடுத்தல் என நீண்டகாலமாக ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை சிவசேனை நடத்தி வந்தது. இப்போது பகிரங்கமாக தமிழர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு மிரட்ட விடுத்து சச்சிதானந்தன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி கொள்முதல் கடை இருக்கக் கூடாது; இது இந்துக்களின் பூமி.

இங்கே 5,000 ஆண்டுகால மரபு கடைபிடிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி உண்போரின் நாடுகளில் நாங்கள் பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா? இந்த பூமி இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்குமானது.. மரபுகளை பின்பற்றாமல் போனால் நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார் சச்சிதானந்தன்.

இஸ்லாமியர்கள் என குறிப்பிடாமல் அப்பட்டமாக மிரட்டல் விடுத்து பேசியிருக்கிறார் சச்சிதானந்தன். ஈழத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே யுத்த காலத்தில் மனக்கசப்பு இருந்தது. பின்னர் பிரபாகரன் சமாதானப் பேச்சுகளை முன்னெடுத்த போது இதற்கு தீர்வு காணப்பட்டது. யுத்தத்துக்கு பின்னர் இஸ்லாமியர்கள் யாழ்ப்பாணத்தில் சொந்த வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் பேசும் இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா அமைப்பினர் சிங்கள சக்திகளுடன் கை கோர்த்திருப்பது பேரபாயம் என்கின்றனர் யாழ். தமிழர்கள்.