உச்சக்கட்ட ஆபாசத்தை கொட்டிய சொப்பன சுந்தரி நிகழ்ச்சிக்கு கிடைத்த ஆப்பு?…

தற்போது தொலைக்காட்சிகள் தங்களது சேனல்களை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பல வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர். இதில் ஒன்று தான் பிரபல ரிவியில் நடந்த பிக்பாஸ். அதனைத் தொடர்ந்து மற்றொரு ரிவி பல்வேறு நிகழ்ச்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறது. ஆம் மொடல்களைத் தெரிவு செய்யும் போட்டியாக சொப்பன சுந்தரி என்ற கவர்ச்சியின் உச்சத்தை தொடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதனை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கம் சார்பில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்க செயலாளர் கன்யா பாபு இது தொடர்பாக அளித்த பேட்டியில், சன் லைப் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக உள்ளது. குழந்தைகளுடன் உட்கார்ந்து கண்டிப்பாக பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது எனவே,சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என புகார் அளித்தோம் என்று தெரிவித்துள்ளார்.