உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன லக்ஷ்மி மேனன் – ரசிகர்கள் ஷாக்.!! புகைப்படம் உள்ளே

நடிகை லட்சுமி மேனன் தமிழில் ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவந்தார். சில பாடல்களையும் பாடியிருக்கிறார். ‘லட்சுமி மேனன் நடித்தாலே, படம் ஹிட்’ எனக் கூறப்பட்ட காலமெல்லாம் உண்டு. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில், ‘ஒரே மாதிரியான, கிராமப்புற சப்ஜெக் கொண்ட படங்களில் நடிப்பது அலுப்பு தட்டுகிறது’ என்று விலகி இருந்தார்.இனி படங்களில் நடிக்கப்போவது இல்லை என அவர் கூறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால், அதற்குப் பின் மனம் மாறி, மீண்டும் நடிக்க வந்தாலும் ஏற்கனவே இருந்தது போல் அவருக்குப் போதிய வரவேற்பு இல்லை.

அவர் நடித்த ‘மிருதன்’, ‘றெக்க’ படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை அதில் அவரது நடிப்பும் அவ்வளவாகப் பேசப்படவில்லை. வாய்ப்பின்றி வீட்டில் முடங்கிக் கிடந்த லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவா ஜோடியாக ‘யங் மங் சங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் முந்தையை படங்களில் இல்லாத அளவிற்கு நெருக்கமான காட்சிகளில் தாராளம் காட்டிஇருகிறாராம் அம்மணி.இதனால், இந்தப் படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் எனத் திட்டவட்டமாகக் கூறி வருகிறாராம் லட்சுமி மேனன்.

பொதுவாக சில படங்களில் பிரபலமாகி சீக்கிரமாக மார்கெட் காலியான நடிகைகள் எடுக்கும் கடைசி அஸ்திரமான அதே பிரமாஸ்திரத்தை தான் அம்மணியும் இப்போது கையில் எடுத்துள்ளார். தொடர்ந்துவரும் படங்களில் கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால் அதற்கும் அம்மணி தயாராம். ஏற்கனவே பிகினி காட்சிகளில் கூட நடிக்க ரெடி என்று லக்ஷ்மி மேனன் கூறியுள்ள நிலையில் தற்போது கவர்ச்சி காட்ட ரெடி என்று புதிய அவதாரம் எடுத்துள்ளார் அம்மணி.

புதிய நடிகைகளைத் தொடர்ந்து வரவேற்றுக் கொன்டிருக்கும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் லட்சுமி மேனனைக் கொண்டாடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.மேலும் தற்போது மிகவும் உடல் எடை குடைந்து ஒல்லியாக பழையபடி நடிக்க வந்துள்ளார், முன்பு போலவே இவருக்கு பட வாய்ப்புகள் மீண்டும் வருமா என்பது சந்தேகம் தான், எனினும் ஓரிரு கதைகள் அவரை நோக்கியும் செல்கின்றனவாம்