உணவு உடையின்றி தவிக்கும் கேரளா மக்களுக்கு உதவ வேண்டுமா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்.!! கரம் கொடுப்போம் பசி தீர்ப்போம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, தற்போது மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது.இதனால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது

மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மழை, சரித்திரத்தில் இதுவே முதல் முறை அங்குள்ள அத்துணை அணைகளும் திறக்கப்பட்டது.வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

இருப்பினும் அவர்களுக்கு உதவிசெய்ய அணைத்து பெரும் நிறுவங்களும் தயாராக உள்ளது.முன்னணி நிறுவனமான “PAYTM” செயலி தன்னுடைய முகப்பு திரையிலேயே கேரளா நிவாரணம் என குறிப்பிட்டுள்ளது இது அணைத்து தரப்பு மக்களான நாம் களத்தில் இறங்கி கரம்கொடுக்க வேண்டும்.அங்கு சென்று தான் உதவி செய்ய வேண்டும் என்றுலம் இல்லை இதுபோன்ற செயலிகள் மூலம் நாம் உதவி பண்ணலாம்.