டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நிலானி. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிசாரை கண்டித்து வீடியோ வெளியிட்டவர்.இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் தன்னை காதலித்து வருவதாக தொல்லை கொடுக்கும் இளைஞர் காந்தி மீது பொலிசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவர் புகார் அளித்த அந்த இளைஞர் தற்போது தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
இவர்கள் விவகாரம் ஏற்கெனவே பொலிஸ் நிலையம் வரை சென்று இருவரும் எழுத்துப்பூர்வமாக எந்தவொரு தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறிய நிலையில் இளைஞர் இவ்வாறு செய்துள்ளார்.மூன்று ஆண்டுகளாக தன்னை நிலானி காதலித்தார் என்று இளைஞர் கூறிவந்த நிலையில்
நேற்று ஒரு பள்ளிக்கூடம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நிலானியை போலீசார் கைது செய்து விசாரித்த போது, நிலானி, நாங்கள் நண்பர்களாகவே பழகி வந்தோம். மேலும் நிலானி ஏற்கெனவே திருமணவர் என்பது போல் புகாரில் தனது கணவர் பெயரை குறிப்பிட்டுள்ளாராம். இவர்களுக்கிடையே நடந்தது என்ன?.. என்பது தீராத மர்மமாக உள்ளதாக கூறப்படுகிறது.