உதவி செய்வதாக கூறி உறவினர் செய்த விபரீத செயல்: தீயில் கருகி இறந்த இளம்பெண்.. திடுக்கிடும் பின்னணி

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்தவர் பிபிஷா (22).இவர் கடந்த 11-ஆம் திகதி தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான ராஜேஷ் என்பவரிடம் வீட்டில் டிவி பழுதாகி இருப்பதாகவும், மெக்கானிக்கை அழைத்து வரும்படியும் கூறினார்.ஆனால் தானே டிவியை சரி செய்வதாக கூறி வீட்டுக்கு வந்த ராஜேஷ் திடீரென பிபிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.பிபிஷா சத்தம் போட்டு அலறியதால் அங்கிருந்து ராஜேஷ் வெளியே சென்றுவிட்டார்.

பின்னர், சிறிது நேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த அவர் பிபிஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் பயந்துபோன பிபிஷா தீக்குளித்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிபிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையில் ராஜேஷ் குறித்து பொலிஸ் புகார் கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பிபிஷா உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ராஜேஷை கைது செய்யும்வரை பிபிஷாவின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதையடுத்து ராஜேசை கைது செய்யத் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பிபிஷாவின் சடலத்தை பெற்று களைந்து சென்றனர்.