உனது மனைவி உயிரோடு இருக்கும் வரை…… விமானத்தில் பறந்து வந்து அவளை கொலை செய்தது எதற்காக? கணவர் வாக்குமூலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுதமி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் ராஜேஷ். இவருக்கும் கவுதமி என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தலையணையால் முகத்தை அமுக்கி கவுதமி கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

கொலை குறித்து அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூடா நட்பு இருந்தது. இதுகுறித்து கவுதமி அறிந்து என்னை கண்டித்தார். உனது மனைவி உயிரோடு இருக்கும்வரை நமக்கும் சந்தோஷம் இருக்காது, எனவே அவளை கொலை செய்துவிடு என கலைவாணி என்னிடம் தெரிவித்தாள். இதற்காக நான் விடுமுறை எடுத்து ஜோத்பூரில் இருந்து விமானத்தில் பெங்களூருவிற்கு வந்தேன்.

எனது குழந்தைகள் 2 பேரும் அவருடைய தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தனர். எனது மனைவியுடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள் தூங்கியபின்னர் தலையணையை வைத்து முகத்தில் அமுக்கி கொலை செய்தேன்.

அதன்பின்னர், அவள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் சேட் கடையில் விற்றேன். நகைக்காக இந்த கொலை நடந்ததாக பொலிசாரை திசை திருப்ப திட்டமிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.