உயிர் கொல்லி நோயின் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஒரு பெண்னை பார்த்து அதிர்ச்சியில் நடிகை குஷ்ப்பு கண்ணீர் சிந்தியுள்ளார். நடிகர் விஷால் தொகுத்து வழங்கும் நிகழச்சிக்கு இந்த வாரம் குஷ்பு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். இதன்போது, புற்றுநோயின் இறுதி கட்டத்தை எண்ணிக் கொண்டிருக்கும் நித்தியா என்ற யுவதி நேரில் நிகழச்சிக்கு வந்துள்ளார். இன்னும் நான்கு மாதத்தில் இறந்து விடுவதாக வைத்தியரும் அறிவித்து விட்டார். அது மட்டும் இல்லை. நோய் வந்தது தெரிந்ததும் அவரின் கணவரும் அவரை தனிமையில் விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதேவேளை, அவரை காப்பாற்றும் கட்டம் கடந்து விட்டதால் அவரின் இறுதி ஆசைகளை நடிகர் விஷால் கேட்டுள்ளார். நித்தியாவுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றார். அவரை படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், நித்தியா கூறிய வார்த்தைகளும் அவரின் நிலைமையும் பார்ப்பவர்களை கதறி அழ வைத்துள்ளது.