உயிர் நண்பனை எரித்துக் கொன்ற இளைஞர்… உதவிய காதலி: அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இளைஞரை எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் திகதி மொத்தமாக எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.சடலத்தின் ஒரு கையில் ஆரியா என பச்சைகுத்தப்பட்டிருந்ததை அடுத்து கொல்லப்பட்ட நபர் கேரள மாநிலத்தவராக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த பொலிசார், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் கேரள மாநிலம் வலியதுறை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என தெரியவந்தது.

கொல்லப்பட்ட இளைஞர் பல்வேறு வாகன கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர் என விசாரணையில் தெரியவந்தது.கொள்ளையிட்ட பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆகாஷை அவரது நண்பர்கள் அனு மற்றும் ஜித்து என்பவர்களே கொலை செய்துள்ளனர். மார்ச் மாதம் 30 ஆம் திகதி அனுவின் காதலி ரேஷ்மா தமது குடியிருப்புக்கு விருந்துக்கு வரும்படி அனுவை அழைத்துள்ளார்.

இந்த நிலையில் விருந்துக்கு சென்ற அனுவுக்கு மதுவில் தூக்க மருந்து கலந்து அளித்துள்ளனர். பின்னர் அனுவும் ஜித்துவும் சேர்ந்து ஆகாஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.இந்த வழக்கில் தற்போது முக்கிய குற்றவாளியான அனுவும், அவரது காதலி ரேஷ்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.