உரிமையுடன் பேசிய அஜித்.. வீட்டிற்கு அழைத்து அஜித்தை தட்டிக்கொடுத்த கலைஞர்.! ஒரு சுவாரசிய பகிர்வு

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் நல குறைபாட்டால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவர் உடல்நலம் தேறிவர வேண்டுமென்று கட்சி தொண்டர்கள் மற்றும் பல்வேறு மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கலைஞர் அவர்களுக்கும் நடிகர் அஜித் அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை கொஞ்ஞம் நினைவு கூர்வோம்.

தமிழ் சினிமா துறையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர் “தல” என்றழைக்கபடும் அஜித் பல கோடி ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார்.பல ரசிகர்களை கொண்டாலும் நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சியிலும் காண்பது என்பது மிகவும் அறிது தான்.

ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களின் சினிமா மற்றும் பொதுப்பணி சாதனைகளை போற்றும் வகையில் ”பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்று தமிழ் சினிமாத்துறையினரால் விழா அமைக்கப்பட்டு அதில் பல்வேறு திரைப்பட கலைஞர்களும் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஜித் “இது போன்ற அரசியில் விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி வரவழைக்கின்றனர்.

எங்களுக்கு அரசியல் வேண்டாம் ஐயா, எங்களை நடிக்கவிடுங்க அரசியலையும், சினமாவையும் ஒண்ணாக்க பாக்கிறாங்க. இதற்கு ஒரு நல்ல முடிவை எடுங்க ஐயா’ என்று மேடையில் தைரியமாக பேசி கலைஞரிடம் கோரிக்கை வைத்தார்.

அவரின் பேச்சை கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். மேலும், அஜித்தின் இந்த ஆதங்கமான பேச்சிக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.ஆனால் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அந்த அரங்கத்தில் அஜித்தின் தைரியமான பேச்சை கண்டு கலைஞர் அவர்கள் நடிகர் அஜித்தை வீட்டிற்கு அழைத்து தட்டி கொடுத்து அவரது தைரியத்தையும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.