உலகில் உயிருடன் உள்ள ஒரே ஒரு வெண்ணிற உராங் உட்டான் இது தானாம் ..!! வெளியான வீடியோ

உலகிலேயே உயிருடன் இருக்கும் ஒரே ஒரு வெண்ணிற உராங் உட்டான் வகை குரங்கு, இந்தோனேசியா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. முகம், கை கால் மட்டுமின்றி ரோமங்களும் வெள்ளை நிறத்தில் காணப்படும் வெண்ணிற உராங் உட்டான் வகை குரங்கினம் அழிந்து விட்டது. இதில் மிச்சமிருப்பது ”ஆல்பா” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு குரங்குதான் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பா குரங்கு ஓராண்டுக்கு முன் இந்தோனேசியாவில் உடல் நலிவுற்ற நிலையில் மீட்கப்பட்டது.

பின்னர் வன உயிரின பாதுகாப்பு வல்லுநர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, வனப்பகுதியில் இயற்கையான சூழலில் வசிக்கும்வகையில், கடிங்கான் (KATINGAN) பகுதியில் உள்ள புகிட் பாகா புகிட் ராயா தேசிய பூங்காவில் (BUKIT BAKA BUKIT RAYA NATIONAL PARK) அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது ”ஆல்பா”