உல்லாசத்திற்கு பிள்ளைகளையே இரையாக்கிய தாய்..! சென்னையில் அரங்கேறிய கொடூர சம்பவம்

சென்னை கிண்டியை அடுத்து குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு அதேபகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய் கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரின் டார்ச்சரால் தனது கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கை பாதித்ததால் குழப்பத்தில் இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன் தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்டு வந்துள்ளார் அபிராமி. இந்நிலையில், நேற்று விஜய் மாதம் கடைசி என்பதால் வேலை அதிகமாக இருந்ததால் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அபிராமி, டி யில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். தாயின் உல்லாசத்துக்கு தாம் தடையாக இருப்பதால் கொள்கிறார் என தெரியாமல் அதை வாங்கிக் குடித்த பிஞ்சுகள் குடித்துள்ளது. சில நிமிடங்களில் வாயில் நுரை தள்ளி துடிதுடித்து உயிரிழந்துள்ளது.இந்நிலையில், வேலை முடிந்து இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த கணவர் விஜய் வீட்டின் கதவு லேசாக சாத்தப்பட்டிருந்தது திறந்துப் பார்த்ததும் தனது குழந்தைகள் இறந்துக் கிடந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அலறித் துடித்தார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர். பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த போலீசார் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரு சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவரது அபிராமிக்கு பலமுறை போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தனது கள்ளக் காதலன் சுந்தரத்துடன் அபிராமி எஸ்கேப் ஆனது தெரிந்துள்ளது.இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் விசாரணையில் குன்றத்தூர் – போரூர் நெடுஞ்சாலையில் இருந்ததை அறிந்த போலீசார் கள்ளக் காதலன் சுந்தரத்தை கைது செய்தனர்.

அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அபிராமியுடன் இருந்த கள்ளக்காதலை ஒப்புக் கொண்டார். மேலும் தனக்காகவே அவரது குழந்தைகளை அபிராமி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அபிராமியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, தான் கள்ளக் காதலனுடன் எஸ்கேப் ஆகும் முன்பாக அபிராமி கணவருக்கும் தேனீரில் விஷம் கலந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். அதை அவர் குடிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். உடல் சுகத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு தனது கணவரையும் கொள்ள விஷம் வைத்துவிட்டு பக்காவாக ப்ளான் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.