உள்ளாடைக்குள் வைத்து லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை

அபுதாபிக்கு தங்கம் கடத்த முயன்ற தமிழ் தொலைக்காட்சி நடிகை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் KEMPEGOWD விமான நிலையத்தில் வைத்து குறித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 15 லட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தினை பேஸ்டாக உருக்கி தனது பேண்டின் உள்பகுதியில் பூசிக்கொண்டு விமான நிலையம் வந்துள்ளார். அபிதாபியில் இருந்து தங்கத்தினை கடத்தி வந்துள்ளார். இவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் அபிதாபியில் ஒரு குழுவாக இருந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இவர், தொடர்ந்து இந்த வேலையை ஒரு குழுவாக அமைத்து செய்துவந்துள்ளார். அதிகமான தங்கத்தை gulf நாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார் என்பதை தவிர இவரது பெயர் மற்றும் விவரங்கள் பாதுகாப்பு காரணம் கருதி வெளியிடவில்லை.