சீனாவைச் சேர்ந்தவர் யான். 54 வயதான இவர், கடந்த சில நாட்களாக, இடது கண்ணில் நீர் வடிவது மற்றும் கடும் வலியை சந்தித்திருக்கிறார். இதன்பேரில் மருத்துவரை சந்தித்த யான், இடது கண்ணை பரிசோதித்துள்ளார். அப்போது, அவரது கண்ணில் மெல்லிய ஒட்டுப் புழு 2செமீ நீளம் வளர்ந்திருப்பதையும்,
அந்த புழுக்களின் முட்டைகள் இருப்பதையும் டாக்டர் கண்டுபிடித்தார். Thelazia Cllipaeda ரகத்தைச் சேர்ந்த இப்புழுக்கள் சமீபத்தில்தான் அவரது கண்ணில் வந்திருக்கிறது. இதுபற்றி மருத்துவர்கள் விசாரித்தபோது, சில நாள் முன்பாக, தனது வளர்ப்பு நாய் கடித்ததாகவும், இதுவே ஒட்டுண்ணி புழு ஏற்பட காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து, யான் கண்ணில் வளர்ந்திருந்த புழு, அதன் முட்டைகளை டாக்டர்கள் அகற்றினர்.
இந்த தாலசியா புழுக்கள், பூனைகள் மற்றும் நாய்களின் கண்களில் காணப்படும். அவை மனிதர்களை கடித்தால் படிப்படியாக, ரத்தத்தில் இருந்து வளர்ந்து, கண்களின் அடியில் சென்று தேங்கிவிடும். எனவே, வளர்ப்புப் பிராணிகளிடம் மனிதர்கள் கவனமாக இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.