எந்தெந்த ராசிக்கு குருவின் பார்வை படப்போகிறது..! எந்த மாதிரியான அதிர்ஷடத்தை அள்ளித்தர போகிறார் தெரியுமா.?

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக ராசிப்பலனை பார்த்துவிட்டு தான் சில காரியத்திலேயே செயல்படுவார்கள்.சிலர் ராசிப்பலனை முழு மனதாக நம்பி அன்றைய தினத்தில் நல்ல காரியங்களில் ஈடுபடுவார்கள். அப்படி குரு பார்வை எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

மேஷம்


உங்களுடைய சுய தொழிலில் புதிய புதிய யுக்திகளை முயற்சி செய்து, லாபம் பெறுவீர்கள். வீட்டில் பிள்ளைகளால் கலகலப்பான சூழல் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். சொந்த ஊருக்கு பயணங்கள் மேற்கொள்ளும் சூழலால் ஆதாயங்கள் ஏற்படும். உங்களுடைய அறிவுக்கூர்மையால் பிறரால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

கடகம்


வெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த பண வரவுகள் வந்து சேரும். மனைவியினுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலில் பங்கு தாரர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மாத வருமானம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்


உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் அடைவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வை எட்டுவீர்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும்.அரசு சம்பந்தப்பட்ட தாமதமாகி வந்த பணிகள் விரைவில் முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்


உங்களுடைய பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து ஒரு சுமூக முடிவை எட்டும். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல்கள் உண்டாகும்.தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளையும் எதிரிகளையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இ

சிம்மம்


கோர்ட்டில் நிறுவையில் இருந்து வந்த வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வந்து சேரும். விலையுயர்ந்த பொருள்களை கையாளுகிற போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

கன்னி


பணியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேலை சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் அவர்களுடைய அறிவுக்கூர்மையை வெளிக்காட்டுவார்கள். பெற்றோர்களிடம் கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் முழு ஆதரவோடு சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கிற நாளாக இன்று இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்


நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் வந்து சேரும். கடன் வாங்கியாவது தொழிலை அபிவிருத்தி செய்து விடுவீர்கள். திருமணத்துக்கு தக்க வரன்கள் அமையும். உடல் நலத்தில்இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் நீங்கி, உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் இருக்கிறது.

விருச்சிகம்


வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உங்களுடைய தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் நிதானத்தோடு செய்யுங்கள். பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் மேலோங்கும். வேலை சம்பந்தபட்ட வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிதாக அறிமுகம் ஆன நண்பர்கள் மூலம் பொருள் சேர்க்கை ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பும் இருக்கும்.

தனுசு


கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி, புரிதல் உணர்வு அதிகரிக்கும். நீங்கள் தொழிலில் எந்த புதிய முயற்சிகளை மேற்கொண்டாலும், அந்த முயற்சியில் வெற்றி உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி வாகை சூடுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கிறது.

மகரம்


உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எந்த காரியத்தை செய்தாலும், அதில் தன்னம்பிக்கையுடனும் புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதில் உங்களுக்கு வெற்றியும் கிட்டும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக, கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்


அடுத்தவர்களுக்கு, குறிப்பாக முன் பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய நீண்ட கால நெருங்கிய நண்பர்களுடன் கூடிப் பேசி, மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்துடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கிறது.

மீனம்


இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் ஒரு முடிவுக்கு வரும். கடன் தொல்லையை தீர்ப்பதற்கான தன வரவுகள் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலமாக அதிக லாபம் உண்டாகும். முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்பபுகள் தேடி வரும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிாஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.