எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பில்ல…என் பொண்டாட்டிக்கும் மகாலட்சுமி புருஷனுக்கும் தான் தொடர்பு’ : சந்தி சிரிக்கும் சின்னதிரை குடும்பம் கதை!

சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் சின்னதிரை நடிகை மகாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள நடிகை ஜெயஸ்ரீ, குழந்தையுடன் தனியாக என்னை ஈஸ்வர் நன்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். என் கணவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தேவதையை கண்டேன்’ சீரியலில் மகாலட்சுமியுடன் நடித்திருந்தார். மகாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் என்னிடம் விவகாரத்து பெற்றுக்கொண்டு மகாலட்சுமியை திருமணம் செய்ய ஈஸ்வர் ஆசைப்பட்டார். என்னிடம் இதற்காக விவாகரத்து கேட்டார். நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் தினமும் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். என் மாமியாரும் இதற்கு உடந்தை என்னை வயிற்றில் தாக்கினார் . அந்த வலி இன்னும் எனக்கு இருக்கிறது. மேலும், நடுவீட்டில் சிறுநீர் கழிப்பார். இந்த கொடுமையெல்லாம் பொறுக்கமுடியாமல் தான் புகார் கொடுத்தேன். என்றார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர் ஈஸ்வர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், ஜெயஸ்ரீ அவரது முதல் கணவரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். நான் குழந்தைக்கு தவறாக நடந்து கொண்டது என்று என் மீது வீண் பழி சுமத்துகிறார். அவர் குழந்தையின் எதிர்காலம் குறித்து யோசிக்கவே இல்லை. என்மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

எனக்கும் மகாலட்சுமிக்கு தொடர்பு இருக்கு என்று கூறி அவதூறு கிளப்புகிறார். என் மனைவிக்கும் மகாலட்சுமி கணவருக்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கலாம். மகாலட்சுமியின் கணவர் அனில் தூண்டுதலின் பேரில் தான் இது நடக்கிறது. பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் அவர் இப்படி செய்கிறார். என் வீட்டை அபகரித்து கொண்டார். என் பெற்றோரையும் துரத்தி விட்டுவிட்டார்’ என்றார்.