எனது அந்தரங்க புகைப்படங்களை கணவர் வெளியிட்டார்,,!! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ் திரையுலகில் ‘வெயில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா, இந்த படத்தை தொடர்ந்து, தொலைபேசி, செங்காத்து பூமியிலே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் அவரால் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாளத்தில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இந்நிலையில், நடிகை பிரியங்கா தன்னுடைய காதல் கணவரை விட்டு பிரிவதற்கான காரணத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த நடிகை பிரியங்கா, கடந்த 2006 ஆம் ஆண்டு, வெயில் படத்தின் மூலம் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக அறிமுகமானவர். தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் நடித்து சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவார்ட் வாங்கும் அளவிற்கு உயர்ந்தார்.

இவர் லைம் லைட்டில் இருக்கும் போதே, இயக்குனர் லாரன்ஸ் என்பவரை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறினார். சுமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, தன்னுடைய குழந்தையை பெற்று எடுப்பதற்காக பெற்றோரின் வீட்டிற்கு சென்ற பிரியங்கா அதற்குப் பின் சென்னை வரவில்லை. 2013ஆம் ஆண்டு குழந்தை பிறந்ததிலிருந்து கணவரை விட்டு விலகியே இருந்த பிரியங்கா, திடீரென 2015ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு எதிராக சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது உள்பட நான்கு வழக்குகள் இவர் மீது போடப்பட்டது.

தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள பிரியங்கா, முதல் முறையாக தன்னுடைய கணவரை பிரிய காரணம் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் தன்னுடைய கணவர் தனக்கே தெரியாமல் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாகவும், தன்னுடைய கணவர் இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அவரை மன்னிக்க முடியாமலும் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு முன்பு தான் தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்ட அவர், பின் அதை மறுத்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள பிரியங்கா சிறந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் தன்னை ரசிகர்கள் பார்க்கலாம் என கூறியுள்ளார்.