என்னை அடித்து உதைத்து… பாலியல் வன்கொடுமை செய்தார்: ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் பட நடிகை

சமீப காலமாக திரையுலகில் பல பாலியல் தொடர்பான குற்றங்கள் வெளியாகி வருகின்றன .பாலிவுட் திரையுலகில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து நடிகைகள் தொடர்ந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்,நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார். அவருக்கு பல்வேறு நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் நடிகை புளோரா புகைப்பட ஆதாரத்துடன் தான் தாக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.தமிழில் விஜயகாந்தின் கஜேந்திரா, கார்த்திக்கின் குஸ்தி, ரஜினியின் குசேலன்’, கருணாசின், திண்டுக்கல் சாரதி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் பிரபல இந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாடையை உடைத்து துன்புறுத்தினார் என்று பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அப்போது காயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.2007 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தோஷியால் தாக்கப்பட்டேன். அதற்கு முன் அவருடன் டேட்டிங்கில் இருந்தேன். ஒரு வருடம் அவரால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தேன்.

ஒரு தவறும் செய்யாத நான் அவரால் தாக்கப்பட்டு என் தாடைகளின் எலும்பு முறிந்த நிலையில் பயத்துடன் வெளியே வந்தேன்அப்போது அவர் சக்தி வாய்ந்த நபராக இருந்த காரணத்தால் நான் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.சில படங்களில் இருந்து நான் மாற்றப்பட்டேன்.

யார் பின்னாலாவது ஒளிந்துகொள்ள முயன்றேன். இதற்கு பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது.தற்போது, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசுகின்றனர், இது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.