மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அருகே உள்ள கஜ்ரான்னா திரையரங்கின் முன்பு இரண்டு பெண்கள் பயங்கரமாக சண்டையிட்டு உள்ளனர். இதனைக்கண்ட பொதுமக்கள் ஏன் எதற்காக இப்படி அடித்துகொள்கிறார்கள் என விசாரித்தப்போது கள்ளக்காதல் விவகாரம் வெளிவந்துள்ளது. அப்போது தன் கணவர் வேறு பெண்ணுடன் சினிமாவிற்கு சென்றுள்ளார். உடனே சந்தேகத்தின் பெயரில் மனைவி பின் தொடர்ந்து கையும் களவுமாக பிடிக்க வந்துள்ளார். இவர்களை கண்டதும் அந்த பெண்ணையும், கணவரையும் வெளுத்து வாங்கியுள்ளார். அதன் பின் மனைவியுடன் இரண்டு பெண்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் அந்த இடம் பரபரப்பாக கணப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.
पत्नी और साली ने फिल्म देखकर निकले पति और सहकर्मी की कर दी पिटाई, @ndtvindia #MondayMorning pic.twitter.com/uaQKuMYrHe
— Anurag Dwary (@Anurag_Dwary) November 4, 2019