என் மனைவியை அவர் திருமணம் பண்ணிகிட்டாரு – வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு கிடைத்த அதிர்ச்சி

தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் இந்த இளசுகள் காமத்தின் மீது நாட்டம் அடைந்து செய்யும் பாலியல் செயல்கள் சில நேரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே இந்த கணவன் மனைவிகள் செய்யும் செயல்கள் மற்றும் கள்ளகாதல் சம்பவங்கள் தற்போதைய சூழ்நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடுகின்றன. கேரளாவில் தனது மனைவியை கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

கோழிக்கோட்டை சேர்ந்த நபர் ஒருவர் பெகரினில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த அவர் போலிசில் ஒரு புகார் அளித்தார். அதில், கிர்மணி மனோஜ் என்பவர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.இந்நிலையில் பரோலில் வெளியில் வந்த அவர் என் மனைவியை திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகார் அளித்தார்.

மேலும், தனது மனைவி தன்னை சட்டரீதியாக பிரியவில்லை எனவும், அவரிடம் உள்ள தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வந்தனர், அதில் கூறிய மனைவி வெளிநாடு சென்று விட்டு அவர் தன்னையும் சந்தோஷப்படுத்தவில்லை தன் குழந்தைகளையும் அவர் கவனிக்கவில்லை அதனால் வேறு திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.