என் மனைவி தாங்க இதுக்கு எல்லாம் காரணம்! அடக்கொடுமையே..!! குடும்பத்தோட செய்யற வேலையை இது.?

பெரும்பாலான கணவன்மார்கள் தங்கள் மனைவியின் ஆசையை நிறைவேற்ற ஆசைப்படுவார்கள்.அப்படி ஒரு மனைவியின் விபரீத ஆசையை நிறைவேற்ற நினைத்து மாட்டிக்கொண்ட சம்பவத்தை பற்றி இப்பதிவில் பாப்போம்.பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று கூறி, மகாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.ஆனால் உண்மையிலே ஆக்யூத்குமார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விடயம் திருமணத்திற்கு பின் மகாதேவிக்கு தெரியவர, அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக கணவரிடம் தினமும் 3 செயின் பறித்துக்கொண்டுதான் வீட்டுக்குள் வரவேண்டும், அப்படி வரவில்லை என்றால் உன்னை வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால் மனைவியின் டார்ச்சர் தாங்கமுடியாமல் அக்யூத்குமார் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணம் முடிந்து 7 மாதங்களில் 106 செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் அக்யூத்குமாரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர். விசாரித்த போது மனைவியின் கொடுமை தாங்க முடியாமலே செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்ததாக கூறியுள்ளார்.

கணவன் பொலிசாரிட சிக்கியதை அறிந்த மகாதேவி தலைமறைவாகி, நாகமங்களா பகுதியில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.சமீபத்தில் அவர் இருக்கும் இடத்தையும் அறிந்த பொலிசார், அவரை கைது செய்தனர்.

இருவரிடமும் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.பெங்களூரு, தவனகரே, தார்வாட், ஹவேரி, தும்கூர் பகுதிகளில்தான் அக்யூத்குமார் தன்னுடைய கைவரிசை காட்டியுள்ளார்.அவர் பறித்த செயின்களின் மதிப்பு சுமார் 1.05 கோடி ரூபாய் வரும் என்பதால், அதை வைத்து இருவரும் ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

மகாதேவி அடிக்கடி கோவா சென்று, பெரிய பெரிய ஹோட்டல்களில் தங்கி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. சொகுசு வாழ்க்கை குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, அடிக்கடி வீட்டையும் மாற்றி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.