குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமான முகமாக இருப்பவர் நடிகை ப்ரீத்தா ஹரி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார்.vதற்போது இந்த தம்பதிக்கு 3 ஆண் மகன்கள் உள்ள நிலையில், என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக நல்ல முடிவு அவரை(ஹரி) கல்யாணம் பண்ணியதுதான். அதில் சந்தோஷத்தை தவிர, கடவுள் வேற எதையுமே கொடுக்கலைங்க என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார், ப்ரீத்தா. தொடர்ந்து பேசிய அவர், கணவன்- மனைவி எப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்கு
என் வீட்டிலேயே வாழுற உதாரணமாக இருக்கிறவங்க என் மாமனாரும் மாமியாரும்தான். அவங்களுக்கு 7 குழந்தைகள். அவர்களிடம் இருந்து நான் கத்துக்கிட்ட நல்ல விஷயங்களுக்கு கணக்கே கிடையாது என்கிறார்.