ஏமாற்றிய காதலனை பிறந்த நாளன்று வரவழைத்து பழி வாங்கிய காதலி.. என்ன செய்தார்னு நீங்களே பாருங்க..!

அமெரிக்காவில் துரோகம் செய்த காதலனை பிறந்தநாள் விழாவில் கழட்டி விடும் காதலியின் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியை சேர்ந்தவர் டியனா பெரே. இவர் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 21வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது 5.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.

நண்பர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி முடித்ததும் டியனா பேச ஆரம்பிக்கிறார். முதலில் தன்னுடைய காதலன் சாண்டோஸ்க்கு நன்றி தெரிவித்த டியனா, சிறிது நேரத்திலே தனக்கு காதலன் இழைத்த துரோகம் பற்றி அனைவரின் முன் கூறி, வீட்டை விட்டு வெளியேறுமாறு அசிங்கப்படுத்துகிறார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.