ஏற்கனவே ப்ளான் போட்ட பொலிசார்.. கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய நபர்.. வெளியே கசிந்த ட்விட்டர் பதிவு..!

தெலுங்கானா பெண் மருத்துவர் வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே ஹைதராபாத் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் ப்ரியங்கா ரெட்டி சம்பவத்தில் ஈடுபட்ட இதில் முக்கிய குற்றாவளிகள் பொலிசாரிடம் 4 பேரும் சிக்கினர். அதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குற்றவாளிகள் நால்வரும் தப்பிக்க முயன்றதாக கூறி என்கவுண்டர் நடத்தியதாக. பொலிசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களிடம் தற்போது நல்லவரவேற்பு நன்றியும் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், என்கவுண்டர் குறித்து ஹைதராபாத் பொலிசார் முன்கூட்டியே தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தள நெட்டிசன் ஒருவர் ஹைதராபாத் பொலிசாரை ட்விட்டரில் டேக் செய்து கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். நேற்றிரவு சுமார் 11.35 மணிக்கு ஹைதராபாத் பொலிசார் அதற்கு பதில் அளித்து இருந்தனர்.

அதில்,” இது தவறான தகவல். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒருவர் முஸ்லீம், மீதமுள்ள 3 பேர் இந்துக்கள். இது ஒரு கொடூரமான குற்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையை உறுதிப்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். தயவுசெய்து குற்றத்திற்கு மத சாயம் பூச வேண்டாம் எனவும், இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றம். எனவே இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம்,” என தெரிவித்தார். இது சம்மந்தமான பொலிசார் பேசிய ட்வீட்டர் ஒன்று இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.