ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடிய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.! என்ன தெரியுமா?

பாடல்களை பாடி இணையத்தில் வைரலான பெண் ஒருவருக்கு, திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்ணுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியை சேர்ந்தவர் பேபி. இவர் அப்பகுதி மக்களிடையே கிராமிய பாடல்கள், சினிமா பாடல்களை பாடி வந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்களை இவர் பாடியது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல்களை அவர் பாடும் காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் அதனை பார்த்த தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் கோடேஸ்வர ராவ், பேபிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெண்மணிபாடும் வீடியோ பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவு இதோ