சுகாதார பிரச்சனை கருதி பிரித்தானியாவில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லெய்சஸ்டர் நகரில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இந்த நகரில் நீண்ட நாட்களாகவே சுகாதார பிரச்சனை நிலவி வருகிறது. பான் எச்சில் கறைகள் சுவர்கள் மற்றும் சாலைகளில் படிந்து அங்கிருக்கும் பொதுமக்களின் சுகாதார பிரச்சனைக்கு இடையூறாக இருந்துள்ளது
இதனை தடுக்கும் விதமாக நகர ஆணையம் மற்றும் காவல் துறையும் இணைந்து ஒரு எச்சரிக்கை பலகையை வைத்துள்ளது. அந்த பலகையில், பொது இடங்களில் பான் துப்புவது சுகாதாரமற்ற செயல். சமூகத்துக்கு எதிரான செயல். அவ்வாறு செய்பவர்களுக்கு £150 அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில்
குஜராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்து அங்கிருக்கும் நபர் இணையத்தில் வெளியிட்டதையடுத்து, இந்த பலகை ஒட்டுமொத்த
இந்தியர்களுக்கும் தலைகுனிவு என இந்தியர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். புகையிலை சாப்பிட்டுவிட்டு பொது இடங்களில் எச்சில் துப்புவது இந்தியர்களுக்கு இருக்கும் கெட்டப்பழக்கம் என்று அது குறிப்பதாக உள்ளது.