கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு வனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வனிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற ஆட்டோ டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. நாகராஜ் இரவு பணிக்கு சென்ற பிறகு, குமாரும், வனிதாவும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.இதனிடையே வனிதாவுக்கும் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. மூர்த்தியும் வனிதாவுடன் நாகராஜ் இல்லாத இரவு நேரங்களில் உல்லாசமாக இருந்து வந்தார்.
மூத்தியுடன் புதிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், குமாருடனான தொடர்பையும் வனிதா விடவில்லை. இரவு நேரங்களில் கள்ளக்காதலர்களை சந்திக்கும் போது, அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாதபடி அந்த பெண் கவனமாக இருந்து வந்தார். மனைவியின் இந்த கள்ளக் காதல் குறித்து நாகராஜுக்கு எதுவுமே தெரியாமல் இருந்துள்ளது.இதனிடையே நேற்றுமுன்தினம் இரவு வனிதாவின் கணவர் ஏ.டி.எம். மையத்துக்கு வேலைக்கு சென்ற பிறகு குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து வனிதாவின் இன்னொரு கள்ளக் காதலனான மூர்த்தியும் வந்து கதவைத் தட்டியுள்ளார்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு அந்த வனிதா அதிர்ச்சி அடைந்தார். யாராக இருக்கும் என்ற பயத்துடன் கதவை திறந்தார். வீட்டு வாசலில் மூர்த்தி நின்று கொண்டிருந்தார். அப்போது . வீட்டுக்குள் வனிதா குமாருடன் அரைகுறை ஆடையுடன் நிற்பதைப் பார்த்த மூர்த்தி குமாரை அடிக்கப் பாய்ந்துள்ளார்.இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் ஆந்திரமடைந்த குமார் மூர்த்தியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் மூர்த்தி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதற்குள் குமார் தப்பி ஓடி விட்டார்.இது குறித்து தப்பி ஓடிய குமாரை ஆரல்வாய்மொழி போலீசார் தேடி வருகின்றனர். பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது