ஓடும் ரயிலில் கழிப்பறைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி! உள்ளே அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஓடும் ரயிலில் கழிவறையில் பெண்ணொருவர் பிரசவித்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை கங்கா-காவேரி ரயிலானது, டோர்னாக்கல்-கம்மம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பிங்கி என்ற 25 வயது இளம்பெண் பயணித்து வந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாவார். இவர் பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா என்னும் பகுதியை சேர்ந்தவர். அதிகாலை 5.40 மணியளவில் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போதே அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கருவறையிலேயே பிரசவ வலி ஏற்பட்டதால், அங்கேயே அவர் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு தாயையும். சேயையும் துப்புரவு பெண் ஒருவர் பார்த்துள்ளார். உடனடியாக அவர் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கால் செய்து சம்பவத்தைப் பற்றி தெரிவித்தார். உடனடியாக அவர்கள் அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள் அவசர வாகன ஊர்தியை தயார் செய்து வைத்தனர்.

அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், உடனடியாக இருவரையும் கீழே இறக்கி தகுந்த சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் ரயில்வே துறை அதிகாரிகள் சேர்த்தனர். தற்போது தாயும்,சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியானது ஓடும் ரயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.