கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்தமே இல்லாமல் உதவிய நடிகர் விஜய்: எவ்வளவு கொடுத்திருக்கிறார் தெரியுமா?

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் நடிகர் விஜய் பணம் அனுப்பியுள்ளார். வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கஜா புயலாக மாறி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டப் பகுதிகளில் கரையைக் கடந்தது. கஜா புயல் கரையை கடந்தபோது கனமழை பெய்ததாலும், சூறைக்காற்று பலமாக வீசியதாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளன.

இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகள், காலநடைகள் போன்றவைகளை இழந்து தவித்து வருகின்றனர். சரியாக உணவு, தண்ணீர் போன்றவையும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சத்தமே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார். அதாவது இன்று காலை திடீரென நடிகர் விஜய்யிடம் இருந்து புயல் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து நாகை தெற்கு மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் சுகுமார் கூறுகையில், இன்று காலை விஜய் தொடர்பு கொண்டு, ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணப் பொருள்கள் மெழுகுவத்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பிவைக்கப்படும். அதை மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார். கடலூர் மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் சீனு கூறுகையில், என் வங்கிக் கணக்கில் ரூ.4.50 லட்சம் பணம் வந்திருந்தது. யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தோம்.

அது, சென்னையிலிருந்து விஜய் என்ற பெயரில் தளபதியிடமிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பணம் என்று பின்பு தான் தெரிந்தது. மேலும் துரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்க பாண்டியனின் வங்கிக் கணக்கிலும் 2 லட்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. விஜய் அனுப்பிவைத்திருக்கும் பணத்தை குடிசை வீடுகளை இழந்த மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார்.