கடன் வாங்கிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய நில புரோக்கர்! அதன் பின் நடந்த சம்பவம்

தமிழகத்தில் ஆசைக்க இணங்க மறுத்த பெண்ணை தாக்கிய நில புரோக்கரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி திருமுல்லைவாயல் ருக்குமணி தெருவைச் சேர்ந்தவஎர் ரமேஷ். இவருக்கு சுஜாதா(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுஜாதாவுக்கும் பருத்திப்பட்டு, அசோக் நிரஞ்சன் நகரை சேர்ந்த நில புரோக்கர் ஹேமநாதன் (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு சுஜாதா குடும்ப செலவுக்கு 1.20 லட்சம் ரூபாய் ஹேமநாதனிடம் கடன் பெற்றுள்ளார்.

அதன் பின் 2018-ஆம் ஆண்டு 1 லட்சம் ரூப்பயை திரும்பி கொடுத்துள்ளார்.  இதையடுத்து மீதம் தர வேண்டிய 20 ஆயிரம் ரூபாயை வந்து வாங்கிக் கொள்ளும் படி சுஜாதா, ஹேமநாதனிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், எனக்கு பணம் எல்லாம் வேண்டாம். என் ஆசைக்கு இணங்கு என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம் சுஜாதா கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தபோது ஹேமநாதன் அவரிடம் பேசி தகராறு செய்துள்ளார். அப்போது ஹேமநாதன் சுஜாதாவை கல்லால் தாக்கியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த

பொதுமக்கள் அவரை பிடித்து திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியதுரை, எஸ்.ஐ பிரதீப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஹேமநாதனை நேற்று கைது செய்தனர்.