நீலிமா ராணி “தேவர்மகன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து இன்று வரை நடித்து கொண்டு இருப்பவர். சின்னத்திரையிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
தற்பொழுது தலையணை பூக்கள் மற்றும் அரண்மனை கிளி போன்ற தொடர்களில் தொடர்ந்து முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். நீலிமா சினிஉலகத்திலும், சின்னத்திரையிலும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நடிகை ஆவார். இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார்.
தற்பொழுது அரண்மனை கிளி ஷூட்டிங்கின் போது அந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சூர்யா தர்சன் என்கிற சூர்யாவுடன் சேர்ந்து நீலிமா ராணி டூயட் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் கடற்கரையில் ரெண்டு பேரும் சூர்யாவின் “NGK” படத்தின் ஹிட் பாடலான “அன்பே என் பேரன்பே” பாடலுக்கு ஆடியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
கடற்கரையில் நீலிமா ராணியின் டூயட் சாங் pic.twitter.com/AKtRvVKO47
— tiktokbeauties (@tiktokbeauties2) November 24, 2019