கடற்கரையில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை..!! சென்னை மெரினா கடற்கரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பெண் ஒருவரை அடித்து கொலை செய்து சடலத்தை மண்ணால் மூடிச்சென்ற கொலையாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் இருப்பதையும், அந்த சடலம் மீது மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக மூடப்பட்டு இருந்ததையும் பார்த்துள்ளனர். இருப்பினும் அந்த பெண்ணின் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடலெங்கும் காயங்கள், முகம் அதிகமாக தாக்கப்பட்டுள்ளது. காயங்களிலிருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவர் யார்? என்ன? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.அந்த பெண்ணின் அருகில் நான்கு ஜோடி செருப்புகள் கிடந்தன. கூடவே மதுபாட்டில்களும் அந்த பெண்ணின் செல்போனும் இருந்தது.அந்த செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.

இரவில் உல்லாசமாக இருக்க கடற்கரைக்கு அந்த பெண்ணை யாரேனும் தனியாக அழைத்து வந்திருக்கலாம் என்றும் ஒன்றாக மது அருந்திய இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அதனால் அந்த பெண்ணை நபர் கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தாக்கப்பட்ட பெண் இறந்துவிடவும் பதட்டத்தில் அரைகுறை மண்ணை போட்டு மூடியதுடன், தனது செருப்பையும் அங்கேயே விட்டு கொலையாளி தப்பி சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.