அஜித் ரசிகர்கள் எப்போதும் ஒரே ஒரு விஷயத்துக்காக தான் வெயிட்டிங். தலயின் படங்களின் அப்டேட் எப்போதும் உடனே உடனே வந்தது கிடையாது. ரசிகர்கள் மற்ற நடிகர்களின் பட ஸ்பெஷல் வந்தால் உடனே அஜித் பட தயாரிப்பு குழுவிற்கு தங்களது வேண்டுகோள் விடுப்பார்கள். அதேபோல் தான் இப்போது விஸ்வாசம் அப்டேட் வேண்டு என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். பல அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் தயாரிப்பு குழு மற்றும் இயக்குனர்கள் மீது தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
ரசிகர்களின் வேண்டுகோளை தயாரிப்பு குழு ஏற்பார்களா, அப்டேட் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் இது தொடர்பாக ரசிகர் ஒருவர் அஜித்தின் மேனேஜரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு அவர் அந்த ரசிகரை வசைபாடுகிறார் தற்போது அந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.