கடைசியா என் சிரிப்பை பாத்துக்கோங்க: தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட பெண்

சென்னையில் கணவன், மாமியார் கொடுமைபடுத்துவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவர் கடந்த ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த ஆனந்தி (39) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.அன்றிலிருந்து தேவநாத், அவருடைய பெற்றோர் சம்மந்தம் – சிவகாமி ஆகியோர் ஆனந்தியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.இதனால் மனமுடைந்த ஆனந்தி 8 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, வாக்குமூலமாக இரண்டு வீடியோக்களை பதிவு செய்து, அதனை வாட்ஸ் ஆப்பில் தன்னுடைய குடும்பத்தாருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆனந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஆதாரங்களையும் திரட்டியுள்ளனர்.அந்த கடிதத்தில், அக்க, மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தாங்க.

அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, ரெண்டு வீடியோவும் இருக்கு.என் மாமியார் கொடூர குணம் கொண்டவங்க, என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை. ஏழைக்கு மனைவியா இருக்கலாம், ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்வதை விட சாவதே மேல். டாட்டா பாய் மை சுவிட் ஃபேமலி என அந்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பவம் குறித்து ஆனந்தியின் பெற்றோர் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமண நாள் வந்தது. ஆண்டு கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு என்னுடைய மகள் வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது என கூறியுள்ளனர்.